செம மாஸ்... 234 தொகுதிகளிலும் அன்னதானம் துவங்கியது... களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்!
இன்று காலை முதலே விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டு பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியிருந்த நிலையில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் விஜய் ரசிகர்கள் அன்னதானம் செய்து வருகின்றனர்.

உலக பட்டினி தினமான இன்று மே 28ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். ஒரே இடத்தில் அன்னதானம் வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் தூய்மை பணியாளர்கள், போக்குவரத்து காவலர் என தேடிச் சென்று அன்னதானம் வழங்கி வருவது பொதுமக்களிடையே பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
