செம மாஸ்... இன்று உலக கோப்பையுடன் வந்திறங்கும் கிரிக்கெட் வீரர்கள்... உற்சாகமாய் வரவேற்க ஏற்பாடுகள் தீவிரம்!

 
கிரிக்கெட் இந்தியா பாகிஸ்தான்

இன்று இரவு டி20 உலக கோப்பையுடன் நாடு திரும்பும் இந்திய அணி வீரர்களை உற்சாகமாக வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரப்படுகின்றன. டி20 இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியதும் இந்திய வீரர்களால் உடனடியாக தாயகம் திரும்ப முடியாதபடி பார்படாஸ் பகுதியில்  திடீர்  புயல் ஏற்பட்டது. இதன் காரணமாக விமான நிலையமும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. முன்னதாக தென்னாப்பிரிக்க அணி வீரர்கள், அந்நாடு ஏற்பாடு செய்திருந்த சார்ட்டட் விமானத்தில் தென்னாப்பிரிக்கா சென்றார்கள். இந்திய வீரர்கள் மட்டுமே ஹோட்டலில் சிக்கிக் கொண்டனர்.

இந்தியா
இந்திய அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அமைந்துள்ள இடத்திற்கு அருகே சூறாவளி தாக்கியதால் வீரர்கள் யாரும் ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புயல் கிரேடு 3 என்ற நிலையில் இருந்து கிரேடு 4 என்ற ஆபத்தான நிலைக்கு  மாறியது. இதனால் பார்படாஸ் பகுதியில் தங்கியிருந்த இந்தியர்கள் எப்போது திரும்புவார்கள் என்று அறிய முடியாத சூழல் ஏற்பட்டது.

அதன் பின்னர் சூறாவளி பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இந்தியர்கள் தாயகம் திரும்பக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ செய்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட்
நேற்று ஜூலை 2ம் தேதி மாலை 6 மணிக்கு இந்திய வீரர்களுடன் சிறப்பு விமானம் பார்படாஸில் இருந்து புறப்பட்டது. இந்திய நேரப்படி இன்று ஜூலை 3ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு அங்கிருந்து கிளம்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ஜூலை 3ம் தேதி இரவு 7.45 மணிக்கு இந்திய வீரர்கள், இந்தியா வந்து சேர்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பையுடன் வந்திறங்கும் இந்திய வீரர்களை உற்சாகமாய் வரவேற்க ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வரப்படுகின்றன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web