செம மாஸ்... இந்தியாவில் 2025 செஸ் உலகக் கோப்பை தொடர் .... FIDE அறிவிப்பு.!

 
செஸ் உலகக் கோப்பை


 
உலக கோப்பை தொடர்  செஸ் போட்டிகள்  இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு  அறிவித்துள்ளது. இந்தப் போட்டி அக்டோபர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெறவுள்ளது, மேலும் இதில் 206 வீரர்கள் ஒற்றை நீக்குதல்  வடிவில் போட்டியிடுவார்கள்.
இந்தத் தொடரில் முதல் 3  இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் 2026ம் ஆண்டு கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவார்கள், இது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கு சவாலாகும் வீரரைத் தீர்மானிக்கும். இந்தியாவில் இதற்கு முன்பு 2002ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையை விஸ்வநாதன் ஆனந்த் வென்றார்.

சர்வதேச அரங்கில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து சாதித்து வரும் நிலையில், உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பது அதற்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் அமைந்துள்ளது. நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், 2023 உலகக் கோப்பையின் 2ம் இடத்தைப் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தா, தற்போது உலக தரவரிசையில் 5 வது இடத்தில் உள்ள அர்ஜுன் எரிகைசி ஆகியோர் இந்த போட்டியில் பங்கேற்கும் நட்சத்திரங்களில் அடங்குவர்.

செஸ் உலகக் கோப்பை

இந்நிகழ்வை நடத்தும் நகரம் குறித்த தகவல்கள் பின்னர் வெளியிடப்படும்.  புது டெல்லி, சென்னை, பெங்களூரு, அல்லது அகமதாபாத் ஆகியவற்றில் நடத்தப்படும்  என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில்  கடந்த  செப்டம்பரில் 45வது ‘செஸ் ஒலிம்பியாட்’ நடைபெற்றது  .  இந்தியா சமீபத்தில் 2022 செஸ் ஒலிம்பியாட், டாடா ஸ்டீல் செஸ் இந்தியா, 2024 உலக ஜூனியர் U20 சாம்பியன்ஷிப் 2024 மற்றும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற FIDE மகளிர் கிராண்ட் பிரிக்ஸின் 5வது லெக் ஆகிய  நிகழ்வுகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?