செம மாஸ்... விஜய் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்... எகிறும் எதிர்பாப்பு!?

 
விஜய் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தின் டைட்டில், விஜய் பட டைட்டில் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம் தற்போது ‘அமரன்’ மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் படம் உள்ளது. இந்தப் படங்களை அடுத்து ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தியுடன் அவர் இணைய இருக்கிறார். இந்தப் புதிய படத்தின் டைட்டில் குறித்தானத் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. 

சிவகார்த்திகேயன்

இந்தப் படத்திற்கு ‘பாஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாம். ஏற்கனவே சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி இணைந்தப் படத்திற்கு ‘டான்’ என இரண்டு எழுத்துகளில் பட டைட்டில் வைத்திருந்தார்கள். படம் ரூ. 100 கோடி வசூல் செய்தது. அந்த ஹிட் செண்டிமெண்ட்டில்தான் இந்தப் புதிய படத்திற்கு இரண்டு எழுத்து டைட்டிலை தேர்ந்தெடுத்து இருக்கிறார்களாம். 

விஜய் குஷ்பு

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘வாரிசு’. இந்தப் படத்திற்கு வொர்க்கிங் டைட்டிலாக முன்பு ‘பாஸ்’ என்று வைத்திருந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. விஜயின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் தனது புதிய படத்திற்கு இந்த டைட்டிலை தேர்ந்தெடுத்திருப்பது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web