செம மாஸ்... நாளை விஜய் முக்கிய ஆலோசனை... 2026 தேர்தலுக்கு புதிய செயலி அறிமுகம்!
தவெக 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி பணிகளை வியூகம் அமைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் அக்கட்சியின் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் கட்சியின் எதிர்கால திட்டங்களை குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பேச உள்ளார். இந்நிலையில் 2வது மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் பேச உள்ளார். இந்த கலந்துரையாடல் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

இந்த கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலமாக உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த உள்ளது. எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து மதுரை 2 வது மாநில மாநாட்டில் செய்ய வேண்டிய பணிகள், குழுக்கள் அமைப்பு குறித்து கூட்டத்தில் பேசப்பட உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
