இன்னும் செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை – திருமா நெத்தியடி !
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் 5ம் தேதி இன்று ஈரோட்டில் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர் சந்திப்பில் இபிஎஸ் 10 நாட்களுக்குள் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதுவே தொண்டர்களின் விருப்பமும் கூட எனக் கூறியுள்ளார்.
ஆனால், யாரை குறிப்பாக இணைக்க வேண்டும் என பெயர்களைக் குறிப்பிடவில்லை. இந்த முயற்சி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் அதிமுகவை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக விளக்கம் அளித்தார். செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு, அதிமுகவில் உட்கட்சி பிரச்னைகளை சரிசெய்யும் நோக்கில் அமைந்துள்ளது.

இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் இது குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, செங்கோட்டையனின் முயற்சி கட்சியை ஒருங்கிணைப்பதற்கு முக்கியமானதாக இருந்தாலும், அவரது அறிவிப்பு முழுமையாக வெளிப்படையாக இல்லை என கருத்டூ தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மதுரையில் அதிமுகவை ஒன்றுபடுத்தும் செங்கோட்டையனின் முயற்சி வரவேற்புக்கு உரியது.

பாஜக, ஆர்.எஸ்.எஸ். பிடியில் இருந்து அதிமுக முழுமையாக வெளியே வர வேண்டும் என்ற கவலை எங்களுக்கு எப்போதும் உண்டு. மனம் திறந்து பேசுகிறேன் என கூறிய அவர், இன்னும் யார் யாரை கட்சியில் சேர்க்க வேண்டும் என முழுமையாக பெயர்களைக் கூட கூறவில்லை,” என குறிப்பிட்டார். “இன்று மனம் திறந்து பேசப்போவதாக சொல்லியிருந்தார் செங்கோட்டையன். ஆனால், முழுமையாக மனம் திறக்கவில்லை என்றே அவர் பேட்டியிலிருந்து தெரிகிறது. யார் யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என அவர் வெளிப்படையாகவே சொல்லலாம். இருப்பினும், அது அவர்களின் உட்கட்சி விவகாரம்,” என கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
