செங்கோட்டையன் அடுத்தகட்ட நடவடிக்கை... ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்குகிறார்!

 
செங்கோட்டையன்

பதவியில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில் செங்கோட்டையன் பண்ணை வீட்டுக்கு தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர். ஒருங்கிணைப்பு குழுவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் செங்கோட்டையன்.

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இதனை தொடர்ந்து திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.

செங்கோட்டையன்

இதைதொடர்ந்து அதிமுக அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்வி, மகிழ்ச்சி என பதிலளித்தவர், இருப்பினும் பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் தனது பணி தொடரும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கிய நிலையில் செங்கோட்டையன் பண்ணை வீட்டுக்கு நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த ஓபிஎஸ், சசிகலா ஆதரவாளர்கள் வருகை தருகின்றனர்.

செங்கோட்டையன்

இந்நிலையில், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையன் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளார். அதன்படி, செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டுமென நினைப்பவர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கையை செங்கோட்டையன் தொடங்கினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?