மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி... முதல்வர் உத்தரவு!

 
சேதுராமன்

மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் உடல் நலக்குறைபாடு மற்றும் வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு முதல்வர்  ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் வா.மு சேதுராமன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த  மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வா.மு.சேதுராமன்

இது குறித்து  வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்  மறைந்த தமிழறிஞரும் கவிஞருமான கலைமாமணி கவிக்கோ வா.மு. சேதுராமன் நேற்று அகவை மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். இதனையடுத்து  அன்னாரின் உடலுக்கு முதல்-அமைச்சர் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

ஸ்டாலின் தமிழக அரசு

இவர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உட்பட பல படைப்புகளைத் தமிழுலகிற்கு அளித்துள்ளவர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன். மேலும், அவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உட்பட  பல விருதுகளைப் பெற்றுள்ளார். பெருங்கவிக்கோ என அனைவராலும் அறியப்பட்ட மூத்த தமிழறிஞர் கலைமாமணி வா.மு. சேதுராமனை கௌரவிக்கும் வகையில்  தமிழ்நாடு அரசு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்திட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?