நாடு முழுவதும் பரபரப்பு... இளம்பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை!
வேலை தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும் எனக்கூறி இளம்பெண் ஒருவரை, அவருக்கு நன்கு அறிமுகமான நபர்கள் காரில் அழைத்து சென்று, ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் வைத்து 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் மயூர்பாஜி மாவட்டம் பங்கிரிபொசி பகுதியைச் சேர்ந்த இளம் பெண்(22) ஒருவர், அவருக்கு நன்கு அறிமுகமான 2 இளைஞர்களுடன் காரில் அழைத்து சென்றுள்ளனர். வேலை தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும் எனக்கூறி இளம்பெண்ணை அவர்கள் காரில் அழைத்து சென்றுள்ளனர். செல்லும் வழியில் அதே காரில் மேலும் 3 இளைஞர்கள் ஏறியுள்ளனர்.

இந்நிலையில் பங்கிரிபொசி பகுதியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் பலசொரி பகுதிக்கு கார் சென்றுள்ளது. அங்கு ஆள் நடமாட்டமற்ற பகுதியில் வைத்து இளம்பெண்ணை 5 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர் இளம்பெண்ணை காரில் இருந்து சாலையோரம் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள எஞ்சிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
