அரியலூரில் பரபரப்பு... காதலி சென்ற பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய காதலன்!

 
பிரேம்குமார்
காதலி திடீரென பேசுவதை நிறுத்திக் கொண்டதால், இளைஞர் ஒருவர் காதலி ஏறிய பேருந்தை மேற்கொண்டு செல்ல விடாமல் தடுப்பதற்காக , பேருந்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து மீன்சுருட்டி, பாப்பாக்குடி வழியாக நரசிங்கபாளையம் கிராமத்துக்கு அரசுப் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல் நரசிங்கபாளையம் கிராமத்தை நோக்கி பயணிகளுடன் பஸ் சென்று கொண்டிருந்தபோது, ​​பஸ் ஸ்டாப் அருகே பிரேம்குமார் (25) என்ற வாலிபர் கையில் பெட்ரோல் வெடிகுண்டுடன் பஸ்சை நோக்கி வந்துள்ளார். இதை உணர்ந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

இதையடுத்து, பேருந்து மீது பிரேம்குமார் பெட்ரோல் குண்டை வீசினார். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்தப்படியே பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடினார்கள்.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரேம்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை பிரேம்குமார் காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் அவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த பெண் பிரேம்குமாரிடம் பேசுவதை நிறுத்தினார். இதனால் பிரேம்குமார் கடும் கோபத்தில் இருந்தார். இந்நிலையில் அந்த பெண், பேருந்து நிறுத்தத்தில் இருந்து குறிப்பிட்ட பேருந்தில் ஏறினார். பேருந்தை மேற்கொண்டு செல்ல விடாமல் தடுப்பதற்காக பேருந்தின் முன் பெட்ரோல் குண்டை வீசியதை பிரேம்குமார் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து மீன்சுருட்டி போலீசார் பிரேம்குமாரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web