சென்னையில் பரபரப்பு... பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் வெட்டிக் கொலை!

 
ஆம்ஸ்டிராங்

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்மநபர்கள் ஆம்ஸ்டிராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். பலத்த காயமடைந்த ஆம்ஸ்டிராங்க்கை உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் கொலைக்கான காரணம் குறித்தும், மர்ம நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web