சென்னையில் பரபரப்பு... கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் . இந்தக் கோவிலுக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கோவில் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கபாலீஸ்வரர் கோவிலுக்குள் மோப்ப நாயை பயன்படுத்தி கோவில் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அறிந்த பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்நிலையில் சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!