சென்னையில் பரபரப்பு... தி.நகர், கே.கே.நகர் உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

 
அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் கே.கே.நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம் உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து வெளியான தகவலின் படி புரசைவாக்கத்தில் 2 வாகனங்களில் வந்த 8 அதிகாரிகள் தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

அமலாக்கத்துறை

அதே நேரத்தில் 2 காவலர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். தியாகராயகநகரில் ஆடிட்டர் விஜயராகவன் என்பவரது வீட்டிற்கு அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். ஆடிட்டர் விஜயராகவன் கடந்த ஆண்டில்  இறந்து விட்டார் என்பது தெரிய வந்ததால் சோதனை நடத்தாமல் அதிகாரிகள் திரும்பினர். 

அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே முழு விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?