சென்னையில் பரபரப்பு... கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி திவ்யா தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள டி.பி. சத்திரம் பகுதியில் தங்கியிருந்து, கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்த மாணவி திவ்யா, அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று, திவ்யாவின் உடலைக் கைப்பற்றி உடல் கூராய்வுக்காக மருத்துவமனைக்கு திவ்யாவின் சடலத்தை அனுப்பி வைத்து விட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
