சென்னையில் பரபரப்பு... அரசுப் பேருந்தை ஆந்திராவுக்கு கடத்திச் சென்ற இளைஞர்!
சென்னையில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று செப்டம்பர் 12ம் தேதி அதிகாலை அரசு பேருந்து ஒன்று திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த இந்த பேருந்து, நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது திருடப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதிக்கு செல்ல இருந்த அரசுப் பேருந்தை கடத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டார். கடத்தப்பட்ட பேருந்து ஆந்திராவின் நெல்லூர் அருகே கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பேருந்து நிலைய மேலாளர் ராம்சிங் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் ஒடிசாவை சேர்ந்த ஞானராஜன் சாகு என்பவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
