சென்னையில் பரபரப்பு... பட்டப்பகலில் அரசியல் கட்சியின் மாநில தலைவர் வெட்டி படுகொலை!

 
ராஜாஜி

சென்னையை அடுதுள்ள பூந்தமல்லி அருகே இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநிலத் தலைவர் ராஜாஜி, மர்ம நபர் ஒருவரால் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாஜி (45). இவர், இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி அமைப்பின் மாநில தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் இருந்து மாங்காடு செல்லும் சாலையில், தேநீர் கடை ஒன்றில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது தேநீர் கடைக்கு டீ குடிக்க வருவதைப் போல இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்றுள்ளார். 

ராஜாஜி


பின்னர் வேகவேகமாக திடீரென தேநீர் கடைக்குள் புகுந்த மர்ம நபர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளார் மாநில தலைவர் ராஜாஜியை சரமாரியாக துடிதுடிக்க வெட்டிக் கொலைச் செய்து விட்டு, அங்கிருந்து தப்பியோடினார். எதிர்பாராத இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அரிவாளால் வெட்டப்பட்டு துடிதுடித்து சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார் ராஜாஜி. 

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பூந்தமல்லி போலீசார், ராஜாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வரும் போலீசார், பட்டப்பகலில் கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!