கடலூரில் பரபரப்பு... பிரபல தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

 
கடலூர் வெடிகுண்டு  மருத்துவமனை

கடலூர் மாவட்டத்தில் பிரபல தனியார் பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மோப்பநாய் கொண்டு போலீசார் தீவிர சோதனை செய்தனர். சோதனையில் மருத்துவமனையில் வெடிகுண்டு ஏதும் இல்லாததால் இது புரளி என்று போலீசார் தெரிவித்து சென்றனர்.

கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று டிசம்பர் 29ம் தேதி மதியம் 12 மணியளவில் கடலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள பல்நோக்கு மருத்துமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

கடலூர்

இதனையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறை போலீசார் இது குறித்த தகவலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் மருத்துவமனைக்கு சென்று வெடிகுண்டு தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் லியோ வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் மோப்ப நாய் உதவியுடன் மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனையிட்டனர்.

கடலூர்

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு, வெடிபொருட்கள் ஏதும் இல்லாததால் இது வெறும் புரளி என்பது உறுதிப்படுத்தப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அது போலி வெடிகுண்டு மிரட்டல் என தெரியவந்துள்ளது. மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நோயாளிகளை சிறிது நேரத்தில் பதற்றமடைய செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web