கரூரில் பரபரப்பு... பிரபல ரவுடி தலை துண்டிக்கப்பட்டு படுகொலை!

 
காளிதாஸ்

கரூர் குளித்தலை அருகே பிரபல ரவுடி தலை துண்டிக்கப்பட்டு படுகொலைச் செய்யப்பட்ட சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தில் உள்ள கட்டளை மேட்டு கால்வாய் கரையோரம் நேற்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக லாலாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற லாலாப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் லாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். லக்கி என்ற மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.மோப்ப நாய் சிறிது தூரம் சென்று நின்றது. நாய் நின்ற இடத்தின் அருகே இரண்டு கால்வாய்களை இணைக்கும் குமுளி சென்று கொண்டிருந்தது. இதனால், அவரது தலை கால்வாய்க்குள் வீசப்பட்டதா என்பதை கண்டறிய முசிறி தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

காளிதாஸ்

விசாரணையில் இறந்தவர் அரவக்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடி காளிதாஸ் 32 என்பது தெரிய வந்தது. காளிதாஸ் மீது கரூர் மற்றும் பிற மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!