தூத்துக்குடியில் பரபரப்பு... போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர்!
தூத்துக்குடியில் ரோந்து சென்ற போது போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாதாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (20) இவர் மீது தாளமுத்துநகர், தெர்மல்நகர், மத்தியபாகம் மற்றும் வடபாகம் ஆகிய காவல் நிலையங்களில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் தாளமுத்துநகர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது, மேட்டுப்பட்டி சுடுகாடு பகுதியில் சுற்றித்திரிந்த தாமரைகண்ணனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது திடீரென்று மறைத்து வைத்த அரிவாளை எடுத்து போலீசாரை வெட்ட முயன்றுள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் தாமரை கண்ணனை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்து, சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அதனை விற்பனைக்காக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாமரை கண்ணனை கைது செய்த போலீசார் ஆயுத தடுப்பு சட்டம் மற்றும் கஞ்சா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
