தூத்துக்குடியில் பரபரப்பு... பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 வழங்க கோரிக்கை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 
ஆர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 வழங்க வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கட்டுமான பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

பொங்கல்

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் அந்தோணி செல்வம், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாவட்ட தலைவர் பேச்சு முத்து, மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் காசி மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web