இன்னொரு பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டாரு... பிரபல சண்டைப் பயிற்சியாளர் மனைவி கதறல்!
திரைப்பட சண்டை பயிற்சியாளராக இருக்கும் ஜாகுவார் தங்கம், சென்னை எம்ஜிஆர் நகர் அண்ணால் காந்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர் தனது கணவர் ஜாகுவார் தங்கம் மீது அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், ``நான் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது கணவர் ஜாகுவாருடன் 23 வயது பெண்ணுடன் தொடர்பு உள்ளது.

கடந்த 15ம் தேதி இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்த எனது கணவர் ஜாகுவார் தங்கம், என்னையும், எனது மகன்களையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். எனவே, புகாரை விசாரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.இந்த புகாரை பெற்ற, அனைத்து மகளிர் போலீசார், முதலில், சாந்தியிடம் விசாரித்தனர்.பின், அவர் அளித்த தகவலின் அடிப்படையில், அவர் மகன்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து ஜாகுவார் தங்கத்திடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு, சாந்தியால் குற்றம்சாட்டப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை நடத்திய பிறகே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கத்தின் மனைவி காவல்நிலையத்தில் இப்படியொரு குற்றச்சாட்டை கூறியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
