செப்டம்பர் மாத ராசி பலன்கள்... எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?!
செப்டம்பர் மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சியும், சூரிய சந்திர கிரகணமும் நிகழ இருக்கிறது. சனி வக்ர மாற்றத்தினால் 12 ராசிக்காரர்களுக்கும் இந்த மாதத்தில் மாற்றங்கள் ஏற்படும். இந்த மாதத்திற்கான ராசிப்பலன்களைப் பார்க்கலாம் வாங்க.
மேஷம் :
இந்த மாதத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும், கவலைகள் குறையும். எதிலும் கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவுகள் ஏற்படும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.
ரிஷபம்: பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகு முறையால் வெற்றி காணும் ரிஷப ராசியினரே இந்த மாதம் நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாகவும் பாதுகாப்பாகவும் வைப்பது நல்லது.
மிதுனம்:
இந்த மாதம் வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புத்தி சாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல் சோர்வு உண்டாகும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
கடகம்:
இந்த மாதம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

சிம்மம்:
இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள்.
கன்னி:
எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும் போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.
துலாம்:
இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
விருச்சிகம்:
மாதம் வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரிய தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். ஆனாலும் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும்.
தனுசு:
இந்த மாதம் பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். சுப பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனாலும் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.

மகரம்:
அனுகூலமான பலன் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
கும்பம்:
இந்த மாதம் மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கல் ஏற்படலாம். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு-மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.
மீனம்:
நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். எல்லாவற்றிலும் இருந்து வந்த மன கவலையை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல் நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
