இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்பு!
இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நியமனான செர்ஜியோ கோர் பதவியேற்பு விழா அதிபர் டிரம்ப் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.அப்போது பேசிய டிரம்ப், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு முக்கியமானது. இந்தியா உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்று.
#WATCH | "Well, right now, the tariffs are very high on India because of the Russian oil, and they've stopped doing the Russian oil. It's been reduced very substantially. Yeah, we're going to be bringing the tariffs down...At some point, we're going to be bringing them down..."… pic.twitter.com/oGpHQXJLhE
— ANI (@ANI) November 10, 2025
மேலும், உலகின் மிகப்பெரிய நாடு. இந்தியா மிக வேகமாக வளரும் நடுத்தர வர்க்கத்தையும் கொண்டுள்ளது. பிரதமர் மோடியுடன் எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு இருக்கிறது.ரஷ்ய எண்ணெய் காரணமாக இந்தியா மீதான நமது வரிகள்மிக அதிகமாக உள்ளன. இப்போது அவர்கள் ரஷிய எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். அது மிகவும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே நாங்கள் வரிகளை குறைக்கப் போகிறோம். எதோ ஒரு கட்டத்தில் நாங்கள் அவற்றைக் குறைப்போம்" என்று கூறினார். மேலும் இந்தியா-அமெரிக்கா இடையே எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு வரி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகாமையில் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்திய பொருட்கள் மீது அபராதமாக அமெரிக்காவால் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
