தொடர்ந்து பைக் திருட்டு.. இந்து முன்னணி நிர்வாகி அதிரடி கைது!

 
சிசிடிவி

கோவையின் நகர் பகுதிகளில் பைக்குகள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் அடுத்தடுத்து புகார்கள் குவிந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக,கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், வாகன திருட்டு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

சிசிடிவி

அதனொரு பகுதியாக பைக் திருடப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இருவர் பைக் திருடிச் செல்வது தெளிவாக இருந்தது. இதனையடுத்து அந்நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், பைக் திருடர்கள், திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் என்பது அம்பலமானது. இவர்  தனது நண்பர் ராஜேஷ் உடன் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டார்.

சிசிடிவி

தொடர்ந்து, ராமநாதபுரம் போலீசார் நேற்று இரவு இருவரையும் திருப்பூரில் வைத்து கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரிடம் இருந்து திருடப்பட்ட இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, திருடப்பட்ட பைக்குகளை அடமானம் வைத்திருப்பதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

  

From around the web