சென்னையில் மாஸ்... அதிமுகவை பின்னுக்கு தள்ளிய பாஜக!

 
மோடி இபிஎஸ்

 இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதியில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு இருந்தாலும் சென்னையை பொறுத்தவரை  பாஜக 2 வது  இடத்தை பிடித்துள்ளது.

தமிழச்சி
இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை மத்திய சென்னையில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 5025 வாக்குகள் பெற்றுள்ளார்.  பாஜக வேட்பாளர் வினோஜ்  பி செல்வம் 1493 வாக்குகள் பெற்றுள்ளார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் போட்டியிட்ட பார்த்தசாரதி 84 வாக்குகளையும் , நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டாக்டர் கார்த்திகேயன் 601 வாக்குகளையும் மட்டுமே பெற்று பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  

தமிழிசை தமிழச்சி
அதேபோல் தென் சென்னையில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்து வருகிறார் . 2வது இடத்தில்  பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் பெற்றுள்ளார்.  அதிமுக  ஜெயவர்தன் 1051 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.  வடசென்னையில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் உள்ள நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளர் பால் கனகராஜ் 2ம் இடத்தை பிடித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web