நாடு முழுவதும் கடும் வெப்ப அலை... தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்த மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
வெயில் காலம்

இந்தியா முழுவதும் மிக கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் தேசிய அவசர நிலையைப் பிரகடனப்படுத்த ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  வருகிறது. குறிப்பாக இந்தியாவின் வட மாநிலங்களில் வாட்டிவரும் வெப்ப அலையால் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில்  கடுமையான வெயிலின் தாக்கத்தால் தேர்தல் அலுவலர்கள் 25 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ராஜஸ்தான், பீகார், உத்திரப்பிரதேசம், பஞ்சாப், அரியான, ஒடிசா, டெல்லி, சட்டீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சலபிரதேசம்  மாநிலங்களில்  வெயில் 110 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.  

வெயில்

உத்திரபிரதேசத்தில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 118.76டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால்  கடும் வெப்பத்தை தாங்கமுடியாமல் சுருண்டு விழுந்த பொதுமக்களில் 1,200 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒடிசாவில் 113 டிகிரி வெப்ப அலையை அடுத்து ஒரே நாளில் அங்கு  10 பேர் உயிரிழந்தனர். பீகார் மாநிலம் போஜ்பூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் 5 பேர்  சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.

அதிர்ச்சி! 3வது அலை அறிகுறியுடன் இந்திய மாநிலங்கள்!
ரோட்டாஸ்,கைமூர், ஹவுரங்காபாத் மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் பலியானார்கள். மிர்சாப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஊர்காவல்படையை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.உத்திரப்பிரதேசத்தில் வெப்ப அலை காரணமாக 15 தேர்தல் அலுவலர்கள் பலியாகியுள்ளனர். ராஜஸ்தானில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தாமாக முன்வந்து விசாரணை நடத்திய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிலமை மிகவும் மோசமாக உள்ளதால் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.   

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web