கடும் வெப்ப அலை.. ஈரானில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!

உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக பருவநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. இந்த வகையில் மேற்கு ஆசிய நாடான ஈரானில் கடும் வெப்பம் பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெஹ்ரானில் 107 டிகிரியை எட்டியது. இதனால் 200க்கும் மேற்பட்டோர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், வெப்பச் சலனம் காரணமாக, அங்குள்ள மின் நுகர்வும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
எனவே மின்சாரத்தை சேமிக்க வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அங்கு மூடப்பட்டன. மருத்துவமனைகள் உள்ளிட்ட அவசர சேவை நிறுவனங்களுக்கு மட்டும் விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பகலில் தேவையில்லாமல் நகரை விட்டு வெளியே வரவேண்டாம் என பொதுமக்களை அரசு எச்சரித்துள்ளது. இதேபோல் கடந்த ஆண்டும் அதிக வெப்பம் காரணமாக நாடு முழுவதும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!