விசாரணைக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... நீதிபதி பணி இடைநீக்கம்!

 
சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், விசாரணைக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செயலில் ஈடுபட்டதாக கேரள நீதிபதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட குடும்ப நல நீதிபதியாக இருந்தவர் உதயகுமார். கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிபதி உதயகுமார், விவாகரத்து வழக்கு விசாரணைக்காக வந்திருந்த இளம்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

‘லிவிங் டுகெதர்’ ஜோடிகளுக்கு இந்த உரிமை கிடையாது!! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

இது குறித்து அந்த இளம்பெண் கொல்லம் மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்தார். அந்த புகார் கேரள உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், புகாரின் மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், குடும்ப நல நீதிபதி உதயகுமாரை கொல்லம் மாவட்ட வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டது.

நீதி

இது தொடர்பாக ஐகோர்ட்டு பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கையாக தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து தலைமை நீதிபதி அடங்கிய நீதிபதிகள் குழுவினர் குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி உதயகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?