பாலியல் வழக்கு விவகாரம்.. நாளை ஓய்வு பெற இருந்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!

 
பாலியல் பலாத்காரம்

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கின்றனர். கடந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமிக்கு அங்கு பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தார். தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் உள்ளிட்ட சில ஆசிரியர்களிடம் மாணவி புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்

ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மாணவி நடந்த சம்பவம் குறித்து அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கில் மாணவியிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து சில ஆசிரியர்களின் பெயர்களையும் போலீசார் சேர்த்துள்ளனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஆனந்தகுமார் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பணி இடை நீக்கம்

தொடர்ந்து அப்பள்ளியில் பணியாற்றிய தலைமையாசிரியை ஜீவா ஹட்சன் , மாதவராயபுரம் அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதன் மூலம் 10 ஆசிரியர்களும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், மாதவராயபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெறவிருந்தார். இந்நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை நேற்று உத்தரவிட்டுள்ளது. உத்தரவு நகல் தலைமையாசிரியையிடம் வழங்கப்பட்டது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web