தினமும் செக்ஸ் டார்ச்சர்...எல்லைமீறிய மருத்துவர்.. விபரீத முடிவு எடுத்த செவிலியர்.. அதிர்ச்சி பின்னணி!

 
சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிபவர் சீனிவாசன் (28). இவர் மருத்துவப் பிரிவில் தற்காலிகமாக பணிபுரியும் செவிலியருக்கு  மருத்துவமனையில் தினமும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது விருப்பத்திற்கு இணங்கவில்லை என்றால் பணி நீக்கம் செய்து விடுவதாகவும் செவிலியரை மிரட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த செவிலியர் தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து செவிலியர் அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவர் சீனிவாசனிடம் வத்தலக்குண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சீனிவாசன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து டாக்டர் சீனிவாசனை கைது செய்தனர். செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web