அதிர்ச்சி... 18 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. கணினி ஆசிரியரின் அடாவடி... தலைமையாசிரியரும் துணை போன கொடுமை!

 
சாஜியா

உத்தர பிரதேசத்தில் தில்ஹார் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 18 பேர், அந்த பள்ளியின் கணினி பயிற்சி ஆசிரியர் முகமது அலி என்பவரிடம் பயிற்சிக்குச் சென்றுள்ளனர். அங்கு மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே அச்சம் காரணமாக மாணவிகள் யாரும் இதனை வெளியே கூறவில்லை.

இதனை பயன்படுத்தி, தன்னிடம் டீயூசனுக்கு வந்த 18 மாணவிகளையும் தனித்தனியே வரச் சொல்லி, அவ்வப்போது தொடர்ந்து ஆசிரியர் முகமது அலி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். எனினும் கொடூரத்தை பொறுக்க முடியாத சில மாணவிகள், தலைமை ஆசிரியர் அனில்குமாரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளனர். எனினும், அவர் நடவடிக்கை எடுக்காமல், அவரும் தொடர்ந்து மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லைத் தந்ததாக தெரிகிறது.

சாஜியா

அதன் பிறகே மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இதனை தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களும், மாணவிகளின் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கணினி ஆசிரியர் முகமது அலி, தலைமை ஆசிரியர் அனில்குமார், உதவி ஆசிரியர் சாஜியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சாஜியா

குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!


 

From around the web