அரசு பேருந்தில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை... இளைஞர் கைது!
கேரள மாநிலம் ஈஸ்வரமங்கலத்தை சேர்ந்த இளைஞர் முஸ்தபா. இவர் நேற்று அதிகாலை எர்ணாகுளத்தில் இருந்து கோழிக்கோடு வழியாக கர்நாடக மாநிலம் ஹாசனுக்கு சென்ற பேருந்தில் பயணித்த போது, அதே பேருந்தில் பயணித்த கோட்டயத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டிருந்த நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் நடத்துனருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து பேருந்து கோழிக்கோடு பேருந்து நிலையத்திற்கு வந்ததும் அந்த பெண் நடக்காவு போலீசாரிடம் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து போலீசார், முஸ்தபா பாலியல் தொல்லைக் கொடுத்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!