மருத்துவர் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ... தொடரும் கொடூரங்கள்!!

 
kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் அமைந்துள்ள  மூகாம்பிகை தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு மூத்த மருத்துவராக பணிபுரிந்து வரும் மருத்துவர் பணிக்கு சேர்ந்த  பயிற்சி பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை மற்றும் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதன் காரணமாக  அந்த பயிற்சி பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்   தமிழகம் முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. 

பாலியல் தொல்லை


அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த கட்டமாக நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி   மருத்துவர் ஆண்டனி சுரேஷ் சிங் . இவர்   அங்குள்ள பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் மருத்துவம் பயின்று வரும் மாணவிகளிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தார்.  இது குறித்து  காவல் நிலையத்திற்கு மாணவிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில்  காவல்துறையினர் நேற்று முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.  

கைது

இந்நிலையில் நேற்று மாலை பெண் மருத்துவர் ரேஷ்மா கோட்டார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவர் ஆண்டனி சுரேஷ் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.  இச்சம்பவத்தில், ஆபாசமாக பேசுதல், கடத்தல், பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் என  5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web