பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை... அரசு மருத்துவமனையில் போலீஸார் விசாரணை

 
பாலியல் செக்ஸ் பலாத்காரம் கற்பழிப்பு பெண்

அரசு ஆயுர்வேதா சித்தா மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான நோயாளிகள், உள் நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 

தினமும் மருந்து வாங்குவதற்கும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவருக்கு, மருத்துவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

நாகர்கோவில் மருத்துவமனை

தனக்கு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக இது தொடர்பாக பெண் மருத்துவர் போலீஸில் புகார் செய்தார். பெண் மருத்துவரின் புகாரின் பேரில் போலீஸார் இன்று ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக பயிற்சி மருத்துவர்கள் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

பயிற்சி மருத்துவ மாணவிகளிடமும் தனிஅறையில் சுமார் ஒரு மணி நேரமாக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரணை மேற்கொண்டார்.  பெண் மருத்துவரின் புகாரில் கூறியுள்ள தகவல்கள் உண்மைதானா என்பது குறித்த விவரங்களை அவர் பயிற்சி டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார். புகார் கூறப்பட்ட மருத்துவர், மருத்துவ கல்லூரியின் பயிற்சி  மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் வேறு யாருக்காவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து உள்ளாரா என்பது குறித்த தகவல்களையும் போலீஸார் கேட்டறிந்தனர்.

மருத்துவர்

பெண் மருத்துவர் பாலியல் புகார் கூறியுள்ள மருத்துவர், கடந்த இரண்டு நாட்களாக விடுமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். பெண் டாக்டர் ஒருவருக்கு டாக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு குலசேகரம் அருகே மருத்துவக் கல்லூரி ஒன்றில் கல்லூரி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் பயிற்சி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்று சில நாட்களிலேயே மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web