’பெண்களுக்கு பாலியல் தொல்லை’.. வேதனை தெரிவித்த நீதிபதி!

 
சென்னை உயர் நீதிமன்றம்

நீலகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் கண்காணிப்பாளர் மோகனகிருஷ்ணன் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், மோகன கிருஷ்ணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான விசாரணை முடியும் வரை அவரை பதவியில் இருந்து நீக்கவும், நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்தால், வேறு மாவட்டத்தில் பணியில் அமர்த்தவும் விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. 

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

இதை எதிர்த்து மோகனகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதசக்கரவர்த்தி, பணியிடங்களில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது தார்மீக செயல் மட்டுமல்ல, மறைமுகமான சமூக பிரச்சனையும் கூட. பாலியல் துன்புறுத்தல் பணியிடத்தில் பெண்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்துகிறது, மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்களை பாதிக்கிறது, இதனால் பெண்கள் பணியிடத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பணியிட பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும் அல்ல.

சென்னை உயர்நீதிமன்றம்

இது அங்கு பணிபுரியும் அனைத்து பெண்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், நிறுவனங்களின் பணித்திறனை பாதித்து, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக, மோகனகிருஷ்ணன் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்காததால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவகாசம் அளித்து, வழக்கை மீண்டும் விசாரித்து, 60 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசாகா குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. மோகனகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டு நான்கு வாரங்களுக்குள் தண்டனை குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!