தகவலறியும் சட்ட உரிமை ஆணைய தலைவராக ஷகில் அக்தர் நியமனம்?! அடுத்த தலைமைச் செயலாளர் யார்? முதல்வர் முதல் சாய்ஸ் ஷிவ்தாஸ் மீனா!

 
இறையன்பு

தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு , நுண்ணறிவுப்பிரிவு மற்றும் குற்றப்பிரிவு  தவிர்த்து பல்வேறு சிறப்பு பிரிவுகள் உள்ளன. உதாரணமாக, ஆயுதப்படை பிரிவு, கடலோர காவல்படை, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு, சைபர் க்ரைம், சீருடை பிரிவு, தீயணைப்பு மற்றும் மீட்பு படை உள்ளிட்ட பல பிரிவுகள் அதற்கென தனி ஐ.பி.எஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை நியமனம் செய்து தனிதலைமையாக கொண்டு செயல்பட்டு வருகிறது மேற்கண்ட பிரிவுகளில் பணியாற்றுபவர்களில் முதல் மூன்று பிரிவுகளைத்தவிர மற்றவர்கள் டம்மியாகவே கருதப்படுவார்கள். அவற்றிற்கு மாற்றாக ஒரு துறை உண்டு என்றால் ஒரு பிரிவை விரல் விட்டு சொல்லலாம் அது சிபிசிஐடி.

மாநில அரசின் சிறப்பு குற்ற புலனாய்வு துறை. தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறையால் மேல் விசாரணை செய்ய முடியாத வழக்குகளையும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் சிபிசிஐடி போலீஸ்க்கு மாற்றப்படுவது வழக்கம். அந்த பிரிவிற்கு அனுபவமும் திறமையும் வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரியே இதுவரை டிஜிபியாக நியமிக்கப்பட்டு வந்தார்கள் அவர்களில் ஒருவராக இருந்தவர்தான் ஷகில் அக்தர்.

தமிழகத்தின் அடுத்த தமிழ்நாடு அரசு தகவல் அறியும் சட்ட உரிமை ஆணைய தலைவராக அடுத்த மாதம் ஓய்வு பெறும் தலைமைச்செயலாளர் இறையன்புவின் பெயர் பெரிதும் பேசப்பட்டு வந்த நிலையில் சிபிசிஐடி இயக்குநராக இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற ஷகில் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்  மிகச் சிறப்பான அதிகாரி எனப் பெயர் பெற்றவர்.  இந்நிலையில், டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற ஷகில் அக்தரை  தமிழ்நாடு அரசு தகவல் அறியும் சட்ட உரிமை ஆணைய தலைவராக நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

தகவல் அறியும் உரிமை சட்டம்

யார் இந்த ஷகில் அக்தர்?

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி பெயர் பெற்றவர், சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு ஆகியவற்றில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அல் - உம்மா இயக்கத்தைச் சேர்ந்த இமாம் அலி உள்ளிட்ட ஐந்து பேர் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறையினரால் பெங்களூரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர் அப்பொழுது அசுதோஷ் சுக்லாவுடன் இணைந்து என்கவுண்டரில் முக்கிய பங்காற்றியவர் ஷகில் அக்தர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து 2002ம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி காவல்துறையினரின் பிடியிலிருந்து இவர்கள் தப்பிச் சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், செப்டம்பர் 29ம் தேதி அவர்கள் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 32 வயதான இமாம் அலி மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவன். இவருடன் சேர்ந்து தப்பித்த ஹைதர் அலி பிடிபட்ட நிலையில், இமாம் அலி தேடப்பட்டு வந்தார்.

ஷகில் அக்தர்

பெங்களூரில் உள்ள சஞ்சய் நகரில் உள்ள ஒரு வீட்டில் இமாம் அலியும் அவனது கூட்டாளிகளும் தங்கியிருக்கும் தகவல் அறிந்து அங்கு சென்ற கோயம்புத்தூர் டி.ஐ.ஜி., மதுரை காவல்துறையின் துணை ஆணையர் ஆகியோர் இமாம் அலியையும் அவருடைய கூட்டாளிகளையும் சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். சரணடையச் சொன்ன போது, அவர்கள் மறுக்கவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

இந்த சம்பவத்தில் இமாம் அலி, முகமது இப்ராஹிம், சைபுல்லா, சைபுல்லாவின் மனைவி, மங்கா பஷீர் ஆகிய ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்த தமிழகத்தின் தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்படலாம் என அடுத்த செய்தி தலைமைச் செயலக வட்டாரத்தில் பரவ ஆரம்பித்து இருக்கிறது. டெல்லியில் பணியில் இருந்த வரை முதல்வரே வேண்டி, விரும்பி தமிழகத்திற்கு அழைத்து வந்துள்ளதால், அடுத்த தலைமைச் செயலாளர் லிஸ்ட்டில் ஷிவ்தாஸ் மீனா பெயரை டிக் அடித்திருக்கிறாராம் முதல்வர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web