அட.... அஜீத் பிறந்தநாளுக்கு ஷாலினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்!

 
அஜித்

 தமிழ் சினிமா ரசிகர்களால் தல ஆக கொண்டாடப்படுபவர்  நடிகர் அஜித்குமார். அவர் தனது 53வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்.  அவருடைய ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை பதிவிட்டு  வருகின்றனர். அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய பெயர் தான் சமூக வலைதளங்களில்  டிரெண்டிங்கில் உள்ளது.

அஜித்

இன்றைய தினம் அஜித்துக்கு மிகவும் பிடித்த விஷயத்தை அவரது மனைவி ஷாலினி பரிசாக கொடுத்து ஷாலினி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  அஜித்திற்கு சினிமாவைப் போலவே  பைக்கில் ரைடு போவது ரொம்பவே பிடித்த விஷயம். பைக் என்றாலே அஜித் ஒரு குழந்தை போல மாறிவிடுவார் என பல பிரபலங்கள் கூறியுள்ளனர்.  இந்நிலையில், அஜித்தின் பிறந்த நாளில் அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் அளிக்கும் விதமாக ஷாலினி டுகாட்டி மாடல் பைக் ஒன்றை பரிசளித்துள்ளார்.  

அஜீத் ஷாலினி

அஜித்திற்கு ஷாலினி கொடுத்துள்ள அந்த பைக் DUCATI MULTISTRADA V4. இந்தியாவில் இந்த பைக்கின் விலை கிட்டத்தட்ட ரூ.23 லட்சம் எனத் தெரிகிறது.  அஜித்திற்கு அவர் கிப்ட் -ஆக கொடுத்துள்ள அந்த பைக்கின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!