அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை!

 
சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கரை போலீசார் அழைத்து வந்துள்ளனர்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிதாக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் கைது செய்து கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சவுக்கு சங்கரை காவல்துறையினர் கடுமையாக தாக்கி அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து சட்டப்பணி குழுக்கள் மற்றும் மருத்துவர்கள் மத்திய சிறை சென்று சவுக்கு சங்கரிடம் நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் சவுக்கு சங்கர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது.

சவுக்கு சங்கர்

பின்னர் நீதிபதி, சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கரை போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

சவுக்கு சங்கரின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு முடித்து வைப்பு; சிறை மாற்றம் குறித்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், சிறை அதிகாரிகள் மீதான நடவடிக்கைக்கு உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்க சவுக்கு சங்கரின் தாயாருக்கு அறிவுரை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web