ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை...3 வது முறையாக அணி மாறிய ஷர்துல் தாக்கூர்!
ஐபிஎல் வீரர் டிரேடிங் வர்த்தகத்தில் ஷர்துல் தாக்கூர் புதிய வரலாற்றை படைத்து உள்ளார். ரூ.2 கோடி மதிப்பில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் டிரேடிங் முறையில் மூன்றாவது முறையாக அணி மாறும் சாதனையை ஷர்துல் நிகழ்த்தியுள்ளார்.

ஏலம் அல்லது மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் விரும்பும் வீரர்களை பணம் கொடுத்து அல்லது மாற்று வீரரை வழங்கி டிரேடிங் முறையில் சேர்த்துக் கொள்ளும் நடைமுறை உள்ளது. கடந்த சீசனில் ஏலத்தில் எவரும் எடுக்காத ஷர்துலை, காயம் காரணமாக ஏற்பட்ட அவசரத் தேவையால் லக்னௌ அணி திடீரென இணைத்தது. இப்போது தனது சொந்த ஊரான மும்பை அணியிலேயே அவர் மீண்டும் சேர்ந்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்காக 2018 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கோப்பை வெல்ல உதவிய ஷர்துல் தாக்கூர், கேகேஆர் அணிக்கும் விளையாடியுள்ளார். 105 ஐபிஎல் போட்டிகளில் 107 விக்கெட்டுகள் மற்றும் 325 ரன்கள் சம்பாதித்துள்ள அவர், மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
