தொழிலில் 60% ஷேரிங்.. ஆசை வார்த்தை கூறி ரூ.38 லட்சம் மோசடி.. 3 பேர் அதிரடியாக கைது!

 
முகைதீன் அப்துல் காதர்

சென்னை கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில். பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வரும் இவருக்கும், முஹைதீன் அப்துல்காதருக்கும் இடையே சில காலமாக பழக்கம் இருந்து வந்தது. வெளிநாட்டு உபகரணங்களை வாங்கி விற்கும் தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறி முதலீடு செய்ய முயற்சி செய்து வருவதாகவும் லாபத்தில் 60 சதவிகிதம் தருவதாகவும்  முஹைதீன் செந்தில் என்பவரிடம் கூறினார்.

இதை உண்மை என நம்பிய செந்தில் முஹைதீன் அப்துல்காதருக்கு நேரடியாகவும் ஜி-பே மூலமாகவும் பல தவணைகளில் மொத்தம் ரூ. 38 லட்சம் அனுப்பியுள்ளார். பணத்தைப் பெற்ற முஹைதீன் அப்துல்காதர், செந்திலை ஏமாற்றும் நோக்கத்தில் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் செந்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, முகைதீன் அப்துல் காதர், அவரது மனைவி மற்றும் எஜாஸ் ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 1 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web