ஜூனியருக்கு மொட்டையடித்து ராகிங் கலாட்டா... 7 மாணவர்கள் கைது!

கோவை மாவட்டம் பீளமேட்டில் அமைந்துள்ளது பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி . இந்த கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படித்து வரும் முதலாம் ஆண்டு ஜூனியர் மாணவர்களிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு டார்ச்சர் செய்து மிரட்டல் விடுத்தனர்.
அவர்கள் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள் 7 பேர் முதலாம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர். இந்த கொடூரம் குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் கல்லூரியில் படித்து வந்த சீனியர் மாணவர்கள் மணி, மாதவன், வெங்கடேஷ், தரணிதரன், யாலிஸ், ஐயப்பன், சந்தோஷ் ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர்.
தமிழக அரசு கல்லூரி, பொது நிகழ்வுகளின் மூலம் ராகிங்கை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் கோவையில் பிரபல தனியார் கல்லூரியில் மொட்டை அடித்து ராகிங் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!