அவனைச் சுத்தமா புடிக்கலை... கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று எரித்த மனைவி!

 
லட்சுமி

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகேயுள்ள சானமாவு வனப்பகுதியில் கடந்த மார்ச் 19ம் தேதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில்  சடலமாக கிடந்தது தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரகாஷ் (43) என்பது தெரிய வந்தது. 

பின்னர் அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் எவ்வித தடயங்களும் கிடைக்காத நிலையில், அவரது மனைவி லட்சுமி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து பிரகாஷ் மனைவி லட்சுமியிடம் (36) போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், கணவரை அடித்துக் கொன்றது அம்பலமானது. 

லட்சுமி

மனைவி லட்சுமி தனது காதலன் சின்னராஜ் (38) உதவியுடன் கணவரை கொன்று சானமாவு காட்டிற்கு எடுத்துச் சென்று உடலை தீ வைத்து எரித்ததை போலீசாரிடம் ஒப்புக் கொண்டார். மேலும் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, பள்ளிப்பருவத்தில் இருந்தே லட்சுமி, சின்னராஜ் நண்பர்களாக இருந்தனர். லட்சுமி திருமணத்துக்கு பிறகும் சின்னராஜூடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இருவருக்கும் கள்ளக்காதல் உறவு இருந்தது. 

இதனால், லட்சுமி, சின்னராஜ் இருவரும் அவ்வப்போது சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். அதே நேரம் கணவருடன் என்னால் நெருக்கமாக பழக பிடிக்கவில்லை. ஆனால், எனது கணவர் பிரகாஷ், போதையில் வீட்டுக்கு வந்து, எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். கடந்த மார்ச் மாதம், அவ்வாறு தொந்தரவு கொடுத்ததால் ஆத்திரமடைந்த நான், அவரை கட்டையால் அடித்தேன். இதில் அவர் உயிரிழந்து விட்டார் என லட்சுமி கூறினார்.

லட்சுமி

மேலும் காதலன் சின்னராஜூடன் சேர்ந்து கணவர் சடலத்தை வேனில் எடுத்துச் சென்று, சானமாவு காட்டில் தீ வைத்து எரித்து விட்டோம் என தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து லட்சுமி, அவரது காதலன் சின்னராஜ் ஆகிய 2 பேரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web