3 குழந்தைகளை பெற்றெடுத்தாச்சு... மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்த கணவன்!
திருமணமாகி 12 வருஷங்கள் முழுசா முடிஞ்சுடுச்சு. மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த பின்னரும் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் காதலனுடன் தகாத உறவில் ஈடுபட்ட மனைவியை காதலனுடனேயே அனுப்பி வைத்துள்ளார் பீகாரில் வசித்து வரும் கணவர் ஒருவர்.
பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப உறவில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகும் அந்த பெண் தனது காதலனுடன் தொடர்ந்து தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
Extra-Marital Affair (Mother of three children fell in love with the father of two children, the husband got his wife married to her boyfriend; they had love marriage 12 years ago) Saharsa Bihar
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 19, 2024
pic.twitter.com/0QV5Trw8PS
இதையறிந்த அந்த பெண்ணின் கணவர், தன்னுடைய மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்தார். இருவரும் திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்துள்ளனர். அந்த நபரும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் இருவரும் தொடர்ந்து தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கணவனின் சம்மதத்துடன் இருவரது திருமணமும் கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இருவரையும் திருமணம் செய்து கொள்ளுமாறு கிராம மக்கள் வற்புறுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!