பாலியல் வழக்கில் சேகர்பாபுவின் மருமகன் கைது! கதறும் மகள்... அறம் இல்லாத அறநிலையத்துறை அமைச்சர்!

 
சேகர்பாபு மகள்

அமைச்சர் சேகர்பாபுவின் மகள் மொத்த மீடியாவையும் அழைத்து, தனது தந்தை பொய் வழக்கு போட்டு, தனது கணவனை சிறையில் அடைத்து சித்ரவதைச் செய்து வருவதாக புகார் தெரிவித்துள்ளார். அறம் இல்லாத ஒருவர் அறநிலைய துறையின் அமைச்சராக இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். தனது மகள் சாதி மறுப்பு திருமணம் செய்த போதே, உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று அமைச்சர் சேகர் பாபுவின் மகள் பேட்டியளித்திருந்தார்.

தன்னையும், தனது காதல் கணவரையும் தொடர்ந்து போலீசார் தொந்தரவு செய்து வருவதாகவும், வாழவே விட மாட்டேங்கறாங்க... முதல்வர் இது குறித்து ஏதாவது செய்து எங்களை நிம்மதியா வாழ விட வேண்டும் என்று கோரிக்கையும் வைத்திருந்தார். அது எல்லாம் கானல் நீராய் போய், அதைப் பற்றி யாருமே அப்போது வாய் திறக்கவில்லை. எங்கோ குக்கிராமத்தில் அடிப்படை வசதியில்லை என்று சிறுமி எழுதியதாக சொல்லப்பட்ட கடிதத்திற்கு எல்லாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கிற முதல்வர், உயிருக்கு பாதுகாப்பில்லைன்னு சொல்கிற அமைச்சரின் மகள் பேட்டிக்கு மெளனம் சாதித்து வந்தார்.

இப்போது விஷயம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன், மகளின் காதல் கணவர், பாலியல் குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இது குறித்து, மீண்டும் தங்களை அமைச்சர் சேகர் பாபு பழிவாங்குவதாக அவரது மகள் ஜெயகல்யாணி புகார் தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சதீஷ்குமாரை காதலித்து, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்திருந்தார் ஜெயகல்யாணி. அமைச்சர் சேகர்பாபு இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேலான நிலையில், இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த 2016ல் 23 வயது இளம்பெண்ணை திருமண ஆசைக் காட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாக சதீஷ்குமார் மீது ஒரு பெண் புளியந்தோப்பு மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சதீஷ்குமாரைக் கைது செய்த போலீசார், 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

ஜெயகல்யாணி - சதீஷ் தம்பதி - அமைச்சர் சேகர்பாபு

இதனிடையே காதல் திருமணம் செய்ததற்காக, பழிவாங்கும் நோக்கோடு தனது கணவரை காவல்துறை கைது செய்து விட்டதாக அமைச்சர் சேகர் பாபுவின் மகள் சேகர் பாபுவின் மீது வெளிப்படையாக ஊடகங்களிடம் புகார் தெரிவித்திருக்கிறார். தங்களுக்கு பாதுகாப்பு கோரியும், நியாயம் வழங்ககோரியும், டிஜிபி, தலைமை செயலாளர், சிபிஐ, கமிஷனர் என அனைவருக்கும் அனுப்பிவிட்டோம், ஆனால் எங்களுக்கு உயாரும் உதவி செய்யவில்லை என ஜெயகல்யாணி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!