மத்திய தரைக்கடலில் மூழ்கிய கப்பல்.. மாயமான இரு மாலுமிகள் தேடும் பணி தீவிரம்!

 
 ரஷிய கப்பல்

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து விளாடிவோஸ்டாக் துறைமுகத்துக்கு கடந்த 12ம் தேதி சரக்கு கப்பல் புறப்பட்டது. கப்பலில் 16 மாலுமிகள் இருந்தனர். இந்நிலையில் கடந்த 22ம் தேதி மத்தியதரைக் கடல் வழியாக கப்பல் சென்று கொண்டிருந்தது. ஸ்பெயினின் அகுயிலாஸ், அல்ஜீரியாவின் ஓரான் ஆகிய நகரங்களுக்கு அருகே சர்வதேச கடல் பகுதியில் மத்தியதரைக் கடலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, ​​கப்பலின் இன்ஜின் அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ படிப்படியாக கப்பலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த ஸ்பெயின் கடற்படை மற்றும் அப்பகுதியில் உள்ள மற்ற கப்பல்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டன. இதில் ரஷ்ய கப்பலில் இருந்து 14 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதற்கிடையில், இரண்டு மாலுமிகள் கடலில் விழுந்த நிலையில், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மீட்கப்பட்ட மாலுமிகள் ஸ்பெயினின் கார்டஜீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். இதற்கிடையே தீப்பிடித்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web