ஷிப்பிங் நிறுவன மேலாளர் கடலில் தவறி விழுந்து பலி!

 
கப்பல்

தூத்துக்குடி போல்டன்புரத்தில் வசித்து வருபவர் சந்தனராஜ். இவருடைய மனைவி  திலகராணி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும்  உள்ளனர். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனியின் மரைன் இன்ஜினியரிங் பிரிவில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு  பழைய துறைமுகத்தில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டுவதற்காக சென்றுள்ளார்.

கப்பல்

அப்போது துறைமுகத்தில் நிறுத்தி இருந்த கோமாங்கோ படகில் இருந்து அருகில் நின்றுகொண்டிருந்த புளூஹா கப்பலுக்கு தாவிச் செல்ல முயன்றபோது நிலை தடுமாறி கடலில் விழுந்தார். இதுகுறித்து தகவல்அறிந்ததும்  தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று அவரை மீட்டு முதல் உதவி அளித்து  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆம்புலன்ஸ்

மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?