அதிர்ச்சி!! யூடியூபர் கார் மோதி சம்பவ இடத்திலேயே பெண் பலி!!

 
இர்பான்

பிரபல யூடியூபர் இர்பான்.சென்னையை சேர்ந்த இவர் இர்ஃபான்ஸ் வியூ என்ற பெயரில்  யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரது சேனலுக்கு உலகம் முழுவதும் 3.64 மில்லியன் சாப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இர்பான் உணவு பதிவுகளை வெளியிடுவதில் மிக முக்கியமானவர். கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல் வரை  ஒவ்வொரு வகை உணவு குறித்த பதிவையும் ரசனையுடன் வெளியிடுவார் இவரது  பதிவுகளுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. தமிழகத்தின் இண்டு இடுக்கு, சந்துபொந்தில் உள்ள குட்டி ஹோட்டலைக்கூட தேடிப்பிடித்து வழங்குவதில் இவருக்கு நிகரில்லை என்கின்றனர் இளசுகள்.  அதன் பிறகு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பேட்டி எடுத்தும் பதிவிட்டு வருகின்றனர்.

இர்பான்

இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்ததுடன் திருமணம் நின்று விட்டது.   இந்த திருமண போட்டோக்களை எல்லாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்து "என் வாழ்நாளின் இறுதி வரை என் இதயம் யாருக்காக துடிக்கிறதோ, அவரையே திருமணம் செய்து கொண்டேன். என்னுடைய வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு உங்களுடைய பிரார்த்தனைகளும், ஆசீர்வாதமும் வேண்டும்" என பதிவிட்டிருந்தார். சமூக வலைதளங்கள் மூலம் இவரது பாலோயர்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.  இந்நிலையில் இவரது காரில் அடிபட்டு  மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

இர்பான்

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில்  கோனாதி முரளி நகரில் வசித்து வருபவர்  55 வயது  பத்மாவதி  . இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில்  செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார் . இவர் பணி முடிந்து மறைமலைநகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு  மீண்டும் பொத்தேரி வீட்டிற்கு செல்ல சாலையை கடக்கும் போது காரில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .   தகவல் அறிந்ததும்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர்  உயிரிழந்த பத்மாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அதிவேகமாக வந்து விபத்து ஏற்படுத்திய சென்னை சித்தாலப்பாக்கத்தில் வசித்து வரும் 34 வயது அசாருதீன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில்  அது பிரபல யூடியூபர் இர்பானின் கார் என்பதும், இர்பானின் கார் ஓட்டுநர் அசாரூதின் தான் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web