அதிர்ச்சி! கனமழையின் போது மரத்தடியில் ஒதுங்கிய சிறுவன்! மின்னல் தாக்கி பலியான சோகம்!

 
சிவசக்தி

தென்காசி அருகே மின்னல் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த சுரண்டை அருகே குலையநேரி பகுதியைச் சேர்ந்த முருகன். இவரது மகன் சிவசக்தி (14). இந்த நிலையில்  நேற்று சிவசக்தி பங்களா சுரண்டைக்கு தனது நண்பர்களை பார்ப்பதற்காக சென்றார். அப்போது பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

இதையடுத்து மழையில் நனையாமல் இருக்க சிறுவன் மரத்தடியில் ஒதுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் சுரண்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

கொலை

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுரண்டை போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web