அதிர்ச்சி... தமிழில் 100க்கு 138 மார்க் வாங்கிய மாணவி... 4 பாடங்களில் பெயில்! தேர்வு முடிவுகளில் குளறுபடி!

 
ஆர்த்தி

 தமிழகத்தில் மே 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் விருதுநகர் மாவட்டம் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றிருந்தது. ராணிப்பேட்டை மாவட்டம் குறைவான தேர்ச்சி சதவீதம் பெற்றிருந்தது. திண்டுக்கல் மாவட்டம் நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்திருந்தார்.  இதில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம்  சூரக்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் வேல்முருகன்.

ஆர்த்தி

இவரது மனைவி ஆர்த்தி திருமணத்திற்கு முன் 11ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியவில்லை. கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தேவஸ்தான பள்ளியில் 12ம் வகுப்பு சேர்ந்து பொதுத்தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு முடிவு வெளியான நிலையில் ஆர்த்தி, தனது மதிப்பெண்களை ஆன்லைனில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

தேர்வு
அதில், அவருக்கு தமிழில் 100க்கு 138 மதிப்பெண்கள் போடப்பட்டிருந்தது.  அதாவது கூடுதலாக 38 மதிப்பெண்கள் பெற்றதாக வந்தது. ஆங்கிலத்தில் 92 மதிப்பெண்கள், கணிதத்தில் 56 மதிப்பெண்கள், இயற்பியலில் 75 மதிப்பெண்கள், வேதியியலில் 71 மதிப்பெண்கள், உயர் கணிதத்தில் 82 மதிப்பெண்கள் என மொத்தம் 514 மதிப்பெண்கள்.  கணிதம், இயற்பியல், வேதியியல், உயர் கணிதத்தில் பாஸ் மார்க் எடுத்தும் பெயில் என முடிவு வெளியாகியுள்ளது. இது குறித்து கல்வித்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளார். விரைந்து உரிய தேர்வு முடிவுகளையும், மதிப்பெண்களையும் வெளியிட்டு உயர்கல்வி படிக்க வகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web