அதிர்ச்சி!! ஒடிசாவில் மீண்டும் சரக்கு ரயில் தடம் புரண்டது!!

 
odissa

ஒடிசாவில்  ஜூன் 2ம் தேதி வெள்ளிக்கிழமை  3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 275 பேர் உயிரிழந்தனர்.  1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.  ரயில் விபத்து நடந்த வழித்தடத்தில்ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டன போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட்டன. ரயில்வே அமைச்சர்  விபத்து நடந்த இடத்திலேயே தங்கியிருந்து மேற்பார்வை செய்தார்.  சுமார் 51 மணி நேரத்திற்குப் பிறன் பஹனாகா பகுதியில் தற்போது மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது. மிகப்பெரிய விபத்து நடைபெற்று 3 நாட்கள் முடிவடைவதற்குள் தற்போது ஒடிசாவில் மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் டுங்ரி சுண்ணாம்பு சுரங்கத்திற்கும் ஏசிசி பார்கார் சிமெண்ட் ஆலைக்கும் இடையில் ரயில் தண்டவாளம் உள்ளது. இதில் சென்ற சுண்ணாம்பு ஏற்றி சென்ற ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இது முற்றிலும் தனிப்பட்ட ரயில் பாதை. இந்த ரயில் பாதை ரயில் தண்டவாளம், பெட்டிகள், என்ஜின் அனைத்துமே  தனிப்பட்டவை. ரயில்வேயுடன் எந்த வகையிலும் இணைக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஒடிசா ரயில் விபத்து

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள்  மற்றும் தலைநகரில் உள்ள மத்திய அரசின் மருத்துவமனைகளில் இருந்து முன்னணி மருத்துவ  நிபுணர்கள்  இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம்  புவனேஸ்வர்  அழைத்து செல்லப்பட்டனர்.  அவர்களுடன் நவீன மருத்துவ தளவாடங்கள், அவசர சிகிச்சை பிரிவு உபகரணங்களும் எடுத்து செல்லப்பட்டன. ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்கு பின் சொந்த ஊர் செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. இதைத்தொடர்ந்து ரயில் பாதைகளை சீரமைத்து போக்குவரத்தை சரி செய்வதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.  

ஒடிசா விபத்து
விபத்து நடந்து 51 மணி நேரத்திற்குள்  விபத்து நடந்த தண்டவாளம் வழியாக  சோதனை முறையில்  சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டது.  விபத்து நடந்த நேரம் முதல் அப்பகுதியிலேயே தங்கி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் சேவை தொடங்கப்பட்டதை ஆய்வு செய்தார். இந்நிலையில் பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக இன்று முதல் ரயில் சேவை துவங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று வரை 90 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 56ஆக குறைக்கப்பட்டுள்ளது. பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக விபத்து நடந்த பாலசோர் பகுதி வழியாக 10.45 மணிக்கு முதல் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை செண்ட்ரலில் இருந்து இரவு 7.20க்கு ஹவுரா அதிவிரைவு மெயில் ரயில் ரத்து செய்யப்படுகிறது.  இன்று காலை 10 மணிக்கு புர்லியாவில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் செல்லும் வாரம் இருமுறை அதிவேக விரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் 123 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், 56 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எனவும் ரயில்வே துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web